மத்திய சேமிப்புக்  கிடங்குகள் 
             
            இந்தியாவில் சேமிப்புக் கிடங்கானது 1937ல்  தொடங்கப்பட்டு வேளாண்மைப் பொருட்களை சேமித்து வைக்கிறது இது நாட்டின் மிகப்  பெரிய கிடங்கு ஆகும். மேலும் வேளாண் வாடிக்கையாளர்களுக்கு உதவி புரியும் வகையில்  அமைந்துள்ளது. இந்த மத்திய சேமிப்பு கழகமானது 490 சேமிப்புக் கிடங்குகளைக்  கொண்டது மற்றும் இதன் கொள்ளளவு 9.8 மில்லியன் டன்கள் ஆகும். இந்தச் சேமிப்பு  கிடங்கானது அதிக அளவுடையப் பொருட்களை, வேளாண்மைப்  பொருட்களின் தரத்திற்கு தகுந்தவாறு சேமித்து  வைக்கப்படுகின்றது. 
            இந்தக் கழகமானது, உணவுத் தானியக் கிடங்கு,  தொழில்துறை சேமிப்புக் கிடங்கு, இறக்குமதி பொருட்களின் கிடங்கு, இறக்குமதிப்  பொருட்களின் கிடங்கு, சரக்கு பெட்டி நிலையம், உள்நாட்டு அனுமதிச் சீட்டு மற்றும்  விமானச் சரக்கு வளாகம் போன்ற பல்வேறு செயல்களைக் கொண்டது. சேமிப்பு மற்றும்  கையாளுதல் மட்டும் அல்லாமல், இந்தக் கழகமானது சுத்தம் செய்தல் மற்றும் அனுப்புதல்,  கையாளுதல் மற்றும் எடுத்துச் செல்லுதல், பெறுதல் மற்றும் பகிர்மானம், கிருமிகளை  அழிக்கும் பணிகள், நச்சு வாயு நேர்த்திப் பணிகள் மற்றும் பிற துணைச் செயல்கள்  போன்ற பணிகளையும் உள்ளடக்கியது. மேலும் இந்த மத்திய சேமிப்பக் கழகமானது, பல்வேறு  முகவர்களுக்கு ஆலோசனை பணியையும் / சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கான பயிற்சியையும்  தருகிறது. 
          சேவைகள் 
             
          400க்கும் மேற்பட்ட வேளாண்மை உற்பத்தி,  தொழில்களின் மூலப்பொருட்கள், நிறைவான பொருட்கள் மற்றும் பல்வேறு நீர் ஈர்க்கும்  தன்மை மற்றும் அழுகும் தன்மை உடைய பொருட்கள் போன்ற வர்த்தகத்திற்கு அறிவியல்  பூர்வமான சேமிப்பு மற்றும் கையாள்வதற்கான சேவைகளைத் தருகின்றது. 
          
            
              - அறிவியல் பூர்வமான சேமிப்பு வசதிகளானது இந்தியாவில்  உள்ள 490 சேமிப்புக் கிடங்கின் மூலம் நீர் ஈர்க்கும் தன்மை மற்றும்  அழுகும் தன்மையுடைய பொருட்களையும் உள்ளடக்கிய,  200க்கும் மேற்பட்ட வர்த்தகப் பொருட்களுக்கு உள்ளது. இதில் 6,059 தனிப்பட்ட  பயிற்சியும் உள்ளடங்கும்.
 
              - இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வசதிகளானது 33 சரக்குப்  பெட்டிகள் நிலையமான துறைமுகத்திற்கும் மற்றும் உள்நாட்டு நிலையத்திற்கும் உள்ளது.
 
              - வாக்குறுதிச் சீட்டு / பத்திரம் அடிப்படையில்  சேமிப்பு வசதிகள்.
 
              - கிருமிகளை அழிக்கும் பணிகள்
 
              - ஐஎஸ்ஓ கொள்கலன்களின் கையாளுதல், எடுத்துச் செல்லுதல்  மற்றும் சேமிப்பது.
 
             
           
          ஒப்பந்தத்தின்  அடிப்படையில் சேமிப்பு (Bonded Warehouses) 
           
          மத்திய சேமிப்புக் கழகமானது 76 சுங்க  இலாக்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் சேமிப்புக் கிடங்கினை செயலாற்றுகிறது. (Custom  Bonded Warehouse) இதன் செயலாற்றும் கொள்ளளவு யாதெனில் 0.5 மில்லியன் டன்கள்  ஆகும். இந்த சுங்க இலாக்கா ஒப்பந்த சேமிப்பின் கொள்கை யாதெனில், சுங்க வரியை தவணை  முறையிலான பணம் செலுத்தும் வசதியை செய்வதன் மூலம் தொழில்முனைவோர்களை  ஊக்குவிப்பதும் மற்றும் ஏற்றுமதி பிரிவினைக் குறைந்த முதலீட்டில் செயலாற்றச்  செய்வதும் ஆகும். இந்தச் சேமிப்புக் கிடங்கு நாட்டின் அனைத்துப் பகுதியிலும்  அமைந்தது மட்டுமல்லாமல், வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருமாறு செய்வதும் இதன்  பணியாகும். 
          கிருமி / தொற்று  நீக்குதல் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டுப் பணிகள் 
             
          இந்தியஅரசாங்கமானது, 23. மார்ச் 1968ல்  மத்திய சேமிப்புக் கழகத்திற்கு கூடுதல் பொறுப்பான கிருமி நீக்குதல் /  பூச்சிக்கட்டுப்பாட்டு பணிணை அளித்துள்ளது.இதன் செயல்களானது, பொதுவான முறையில்  பூச்சிக்கட்டுப்பாடு முந்திய மற்றும் பிந்திய கட்டமைப்பில் கரைப்பான்களை நீக்கும்  நேர்த்தி கப்பலில் ஏற்றுமதி செய்வதற்கு முன் நச்சு வாயுவை நீக்குவதற்கான நேர்த்தி,  கொள்கலனில் நச்சு வாயு நேர்த்தி, விமானத்தில் தொற்று நீக்குதல் மற்றும் பல்வேறு  செயல்பாடுகளை உள்ளடக்கியது. பயிர்ப் பாதுகாப்பு தொற்று நோய் தடுப்பு இயக்ககம்  மற்றும் சேமிப்புக் கிடங்கு, இந்திய அரசாங்கத்தின் வேளாண் அமைச்சகம் மற்றும்  இந்திய ஏற்றுமதி கண்காணிப்பு மன்றம் போன்ற அமைப்புகளானது, கப்பலில் சரக்குகளை  ஏற்றுவதற்கு முன் நச்சு வாயு நேர்த்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகப் பொருட்களின்  நச்சு வாயு நேர்த்தி போன்ற கழகத்தின் முக்கியப் பணி யாதெனில் குறிப்பிட்ட  நேரத்தில் இந்திய விமானங்களில் தொற்றுக்களை நீக்குவதாகும். மேலும் தேசியப்  பூச்சிக் கட்டுப்பாடு முகாமின் மூலம் மத்திய சேமிப்புக் கழகமானது இந்த வகையான  நிலைகளை தெரிந்து கொள்கிறது. 
          மத்திய சேமிப்புக் கழகமானது, பூச்சிக்  கட்டுப்பாடு செயல்முறைகளை தேசிய தரப் பயிர்க்கட்டுப்பாடு முறைகள் NSPM II &  12ன் அடிப்படையில் ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் கப்பலில் நச்சு வாயு  நேர்த்திக்கான வசதிகளைச் செய்வதாகும் மற்றும் இந்த ஏற்றுமதி / இறக்குமதிப்  பொருட்களானது மரத்தாலான தொகுப்பு சாதனத்தில் வைப்பதற்கு சர்வதேச தரப்  பயிர்க்கட்டுப்பாட்டு முறைகள் ISPM - 15 னின் FAO / IPPCன் கொள்கையின் படி  பரிந்துரைத்தல் வேண்டும். 
           அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி முறையின்  அடிப்படையில் கழகமானது, தொற்று நோய்களை நேர்த்திக் காண கீழ்க்கண்ட முக்கிய  மையங்களில் நடைமுறைப்படுத்துகிறது. 
          
            
              - CFS - JN துறைமுகம்
 
              - CFS - தூத்துக்குடி (தமிழ்நாடு)
 
              - CFS - சென்னை
 
              - CFS - அட்லாஜ் (அகமதாபாத்)
 
              - CFS - கான்லா துறைமுகம் (காந்திதாம்)
 
              - CFS - விசாக்
 
              - CFS - ஒய்ட் பீல்டு (பெங்களூர்)
 
              - CFS - பனம்பூர் (மங்களூர்)
 
              - ICD - பட்பார்காஜ் (டெல்லி)
 
              - CW - நம்பால் (ஹைதராபாத்)
 
              - CW - ககிந்தா (ஹைதராபாத்)
 
             
           
          தொற்று நீக்குதல்  மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு செயல்களை உள்ளடக்கிய மையங்கள் 
          
            
              - கப்பலில் சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கு முன் நச்சு வாயு  நேர்த்தி.
 
              - கப்பலில் சரக்கும் போது நச்சு வாயு நேர்த்தி
 
              - கொள்கலனில் நச்சு வாயு நேர்த்தி
 
              - இரயில் பெட்டியில் தொற்று நீக்குதல்
 
              - விமானத்தில் தொற்று நீக்குதல்
 
              - முந்திய மற்றும் பிந்திய கட்டுமானத்தில் கரைப்பான்களை  நீக்குவதற்கான நேர்த்தி.
 
              - தொழில்துறையின் உணவகத்தில் தொற்று நீக்குதல் 
 
              - மருத்துவமனைகள், உணவுறை விடுதிகள் மற்றும் பிற  உணர்வுமிக்க வளாகம் போன்றவற்றில் தொற்று நீக்குதல்.
 
              - குடியிருப்பு பகுதிகளில் பூச்சிக்கட்டுப்பாடு மற்றும்  எலிகளை அழித்தல்.
 
             
           
          மண்டல அலுவலகம் 
            மத்திய சேமிப்புக்  கழகம் 
            திருவாரூர் இல்லம் 
            4-நார்த் அவின்யூ 
            ‚நகர் காலனி 
          சைதாப்பேட்டை,  சென்னை 600015 
          
            
              - சேமிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்ட சரக்கு /  பொருட்களின் வகைகள்
 
              - பலசரக்கு சேமிப்பு கழகத்தின் ஆணை 1962க்கு இணங்க,  மத்திய சேமிப்பு கழகமானது வேளாண்மை உற்பத்திப் பொருட்கள், விதைகள், உரங்கள்,  வேளாண்மை கருவிகள் மற்றும் தனிநபர், கூட்டுறவு சங்கம் மற்றும் பிற நிறுவனங்களில்  வரும் வர்த்தகப் பொருட்கள் போன்றவற்றினைச் சேமித்து வைக்கிறது.
 
             
            
              - மேலே கூறப்பட்டுள்ளதற்கு இணங்க கீழக்கண்ட வர்த்தகப்  பொருட்களை சேமித்தல்.
 
              
                - உணவுப் பண்டம் இதனுடன் உண்ணத்த எண்ணெய் விதைகளும்  அடங்கும்.
 
                - கால்நடைத் தீவனம், இதனுடன் பிண்ணாக்கு மற்றும் பிற  ஒருநிலைப்படுத்துதலும் அடங்கும்.
 
                - பண்படாத பஞ்சுகள், கொட்டை இல்லாதது (அ) கொட்டையுடன்  இருத்தல் மற்றும் பஞ்சுகளின் விதைகள் 
 
                - சணல்
 
                - காய்கறி எண்ணெய் மற்றும்
 
                - அறிவிக்கப்பட்ட வர்த்தகப் பொருட்கள்
 
               
             
           
          அங்கீகரிக்கப்பட்ட  பொருட்கள் 
          
            
              - முதன்மையாக கொண்டு வரும் பொருட்களின் அடிப்படையில்  மத்திய சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பொருட்களை  வைப்பவர்களிடம் சேமிப்பதற்கான இடத்தினை முன்பதிவு செய்வதற்காக, எழுதி வாங்கிக்  கொள்ளப்படுகிறது.
 
              - மாநில சேமிப்புக் கிடங்கு ஆணை மற்றும் விதிகளின் படி  இரசீது, சேமிப்பு, கையாளுதல் மற்றும் வழங்குவதற்கான செயல்முறை மற்றும் சரியாக  நேரத்தில் கழகத்தால் வெளியிடும் குறிப்புகள்.
 
              - வைக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவினை  நிர்ணயிப்பதற்கான பரிசோதனை மற்றும் எடை எடுத்தல் கிடங்கிற்கு பொருட்கள்
 
              - வரும்   பொழுது உடனடியாக பொருட்களான இரசீதனை பொருட் வைப்பவரிடம் கொடுத்தல்,  இந்த இரசீதின் பின்புறத்தில் சேமிப்புக் கிடங்கின் பொது நிபந்தனைகள் மற்றும்  விதிமுறைகளை அச்சு அடித்தல்.
 
              - பொருட்களை வெளியே எடுக்கும் போது, அந்தப்  பொருட்களுக்கான இரசீதினை ஒப்படைத்தல் வேண்டும். வைப்பவர்கள் விரும்பும் போது,  மத்திய சேமிப்பு கழகமானது சேமிப்பிற்காக வைத்திருந்து பொருட்களுக்காக உரிமையற்ற  சேமிப்பு இரசீதினைக் கொடுக்கிறது.
 
             
           
          சேமிப்புக்  கட்டணங்கள் 
          
            
              - கழகமானது பொருட்களை சேமித்து வைக்கும் பணிகளின்  அடிப்படையில் பொருள் வைப்பவர்களிடம் இருந்து சேமிப்பு கட்டணத்தினை வசூலிக்கிறது.  இந்த சேமிப்பு கட்டணமானது காலநிலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
 
              - சேமிப்பு கட்டணமானது கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டு  அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் பொருள்  வைப்பவர்கள் மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தில் பொருள் வைப்பதற்கு ஏற்றுக் கொள்ளாத  போது, வைப்பவர்கள் பொருட்களை எடுத்துச் செல்லலாம். முன் பதிவு செய்ததை இரத்து  செய்யலாம் அல்லது ஒரு மாத காலத்திற்கு காத்திருந்து மறு கட்டண பதிவு வரும்பொழுது  சேமித்து வைக்கலாம். இந்தக் காலக்கட்டத்தில் முந்திய மாற்றியமைக்க கட்டண வீதத்தினை  தற்போதைய ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
 
              - பொருட்களை எடுத்துச் செல்லும் போது சேமிப்புக்  கட்டணமானது ரொக்கப் பணமாக கொடுக்கப்படுகிறது. கணக்கீட்டின் அடிப்படையில்  சேமிப்புக் கட்டணமானது சரிசெய்யப்பட்டு, மொத்தத் தொகையை கடைசியாக பொருட்களை  எடுத்துச் செல்லும் போது கழகமானது வாங்குகிறது.
 
              - சேமிப்புக் கட்டணமானது மாதம் மற்றும் வார  அடிப்படையில் வாங்கப்படுகிறது. வாரத்தின் எந்த நாளிலும், அந்த வாரத்திற்கான  கட்டணமானது செலுத்தப்படுகிறது. மாதம் மற்றும் வாரத்தின் அடிப்படையில் சேமிப்பது  மற்றும் கொடுப்பது போன்றவற்றினை உள்ளடக்கிய சேமிப்பு கட்டணமானது கீழ்க்கண்டவாறு  கணக்கிடப்படுகிறது.
 
              - முதல் வாரம் - மாதக் கட்டண வீதத்தில் 44 சதவிகிதம்,  முழுத் தொகையாக (ஒரு பைசா)
 
              - முதல் இரண்டு வாரங்கள்- மாதக் கட்டண வீதத்தில் 68  சதவிகிதம் முழுத் தொகையாக (ஒரு பைசா)
 
              - முதல் மூன்று வாரம் - மாதக் கட்டண வீதத்தில் 88  சதவிகிதம், முழுத் தொகையாக (ஒரு  பைசா)
 
              - முதல் நான்கு வாரங்கள் மற்றும் 30 நாட்கள் வரை /  மாதக் கட்டணம்
 
              - 30 நாட்களுக்கு   மேல்  வாரக்கட்டணம் - மாதக் கட்டண  வீதத்தில் 25 சதவிகிதம் முழுத் தொகையாக (ஒரு பைசா)
 
             
           
          முன் பதிவு 
          
            
              - வரிசைப்படி பார்க்கும் பொழுது சேமிப்பிற்கு இடவசதி  இருக்கும் பட்சத்தில் பொருள் வைப்பவர்கள் குறைந்த பட்ச அல்லது அதற்கு மேற்பட்ட  இடத்தினை முன் பதிவு செய்யலாம். முன் பதிவானது சேமிப்புக் கிடங்கின் விதிமுறைகளின்  படி முதல் முறையாக முன் பதிவு  செய்யும் போது  குறைந்தது மூன்று மாதத்திற்கு செய்யப்படுகிறது.
 
              - முன் பதிவானது முழுமையான மாதம், சேமித்து வைக்கும்  பொருட்களின் தொகுப்பு விபரங்களை வைத்து செய்யப்படுகிறது. இது மட்டும் அல்லாமல்  நிலப்பரப்பின் அடிப்படையில் அதாவது குறைந்ட பட்சமாக 1000 சதுர அடி (93 சதுர மீட்டர்கள்)  நிலப்பரப்பிற்கு முன்பதிவு செய்யப்படுகிறது.
 
              - சாதாரணமாக அறையை முழுவதுமாக முன்பதிவு  செய்யப்படுகிறது. ஆனால் நிலப்பரப்பின் அடிப்படையில் முன் பதிவு செய்யும் போது ஒரு  சதுர அடியில் 0.33 டன்களுக்கு மேலாக சேமித்து வைக்க முடியாது. வர்த்தகப்  பொருட்களின் குவியல் உயரமானது மத்திய சேமிப்புக் கழகத்தின் சேமிப்பு செய்முறைகளை  அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
 
              - ஒரு மாதத்திற்கு குறைவாக முன்பதிவினை நீடிப்பு  செய்வதற்கு அனுமதி கிடையாது. முன்பதிவினை ஒரு மாதத்திற்கு செய்வதற்கு, எந்தத்  தேதியிலிருந்து அடுத்த மாதத்தில் எந்தத் தேதி வரை என்ற மேற்கோளை வைத்து  தீர்மானிக்கப்படுகிறது.
 
              - இடத்தினை முன்பதிவு செய்யப்பட்டிருக்கம் பொழுது,  முன்பதிவு செய்தவர் பொருட்களை சேமித்து வைக்க சுட்டிக்காட்டுதல் வேண்டும். ஆனால்  முன்பதிவு செய்யப்பட்ட இடத்தினை விடுத்து அடுத்த / மற்றொரு இடத்தில் பொருட்களை  சேமித்து வைப்பதற்கு மத்திய சேமிப்பு கழகத்திடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும்.
 
              - வர்த்தகப் பொருட்களின் தொகுப்புகளின் விருப்பப்படி  அமைப்பது மற்றும் சரக்கு சேமிப்பு உயரத்தினையும் கணக்கிடுகிறது. இதன் பின்  கழகமானது உறுதி செய்து, வைப்பவர்களுக்கு தகுந்தாற் போல் பொருட்களானது  சேமிக்கப்படுகிறது.
 
              - முன்பதவி செய்யப்பட்ட இடத்தின் அடிப்படையில்  நிர்ணயிக்கப்பட்ட சேமிப்பு கட்டணத்தினை செலுத்த வேண்டும். ஆனால் மொத்தமாக (அ) ஒரு  பங்கு பயன்படுத்தலில் இருந்தால் கழகமானது அதனைக் கருத்தில் கொள்ளாது.
 
              - காப்பீடு / நஷ்டம் வராமல் பாதுகாப்பிற்கு காலநிலையின்  அடிப்படையில் கூடுதலான கட்டணத்தினை, சேமிப்பு கட்டணத்துடன் செலுத்த வேண்டும்.  மாதத்தின் ஒரு நாளில், குறைந்த பட்ச   விற்பனை மதிப்பைக் கொண்டு கூடுதல் கட்டணமானது கணக்கிடப்படுகிறது.
 
              - சேமித்து வைக்கும் பொருளானது முன் பதிவு செய்யப்பட்ட  கொள்ளளவினை அதிகமாக இருப்பின் (அ) முன்பதிவு செய்யப்பட்ட இடத்திற்கு வெளியே  சேமித்து வைத்திருப்பின், பொருள் வைப்பவர் அதற்கான நிலையான கட்டணத்தினை  மாதத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும். மூன்று  மாதத்திற்கு முன் பதிவு செய்யும் போது முன் பணத்தினைக் கொடுத்தல் வேண்டும். அந்த  முன்பணமானது சேமித்து வைக்கும் காலத்தில் சரிசெய்யப்படுகிறது.
 
              - எந்தவொரு நிலையிலும் சேமிப்புக் கிடங்கானது  சேமிப்பு, கையாளுதல் மற்றும் போக்குவரத்து அல்லது மற்ற பிற கட்டணங்கள், இதனுடன்  நிலுவைத் தொகை ஏதேனும் இருப்பின், முழுமையாக கட்டணங்களை செலுத்திய பிறகு தான்  எடுப்பதற்கு அனுமதிக்கிறது. பொருட்களை சேமித்து வைப்பவர் சேமிப்பு கட்டணத்தினை  செலுத்தாமல் இருக்கும் போது, இந்தக் கழகமானது சேமிப்பு பொருட்களை விற்று,  சேமிப்பு கட்டணத்தினையும், பிறக் கட்டணத்தையும் எடுத்துக்கொள்ள உரிமை உள்ளது.
 
              - முன்பதிவு செய்ததை விரிவுபடுத்துவதற்கு,  சேமிப்புக்காலம் முடிவடைவதற்கு முன் செய்தல் வேண்டும் அல்லது முன்பதிவு காலத்தினை  நீடிப்பதற்கு, முன்பதிவு செய்யப்பட்ட முதல் நாளிலிருந்து மொத்தக் காலத்தினை  கணித்தல்வேண்டும. எனினும் கூட நீடிக்கப்படும் காலமானது, புதிதாக முன்பதிவு  செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
 
              - ஆனால் சேமிப்புக்காலம் முடிந்தும் சேமித்து  வைப்பதற்கு காலத்தினை விரிவுப்படுத்தாமல் விட்டாலும், சேமித்து வைப்பதற்கு சாதாரண  வைப்புத் தொகையையும், கட்டணத்தினையும் வார முறையில் / மாத முறையில் செலுத்தலாம். 
 
              - முன்பதிவு செய்யப்பட்டு அதிகமாக இருக்கும் மூன்று மாத  முன் பதிவினை சுருக்குவதற்கு அல்லது நீக்குவதற்கு ஒரு மாத கால அறிவிப்பினை தருவதன்  மூலம், உட்பிரிவு 25ன்படி குறைந்தப்பட்ச சேமிப்பு கட்டணத்தினை நிர்ணயித்து  முன்பதிவினை சுருக்கி அல்லது நீக்கித்தருகிறது.
 
             
           
          கையாளுதல் மற்றும்  போக்குவரவு  
          
            
              - பொருட்களை சேமித்து வைப்பவர் வழக்கமான பொருட்களை  பாதுகாப்பாக கையாளுவதற்கு சொந்தமாக ஏற்பாடு செய்கின்றன. இதற்கு செய்யும் செலவானது  சேமிப்புக் கிடங்குகளில் சேமித்த வைப்பதற்கு ஆகும்  செலவிற்கு சமமாகும்.
 
              - பொருட்களை சேமித்து வைப்பவர், பொருட்களை கையாளுதல்  மற்றும் போக்குவரவு பொறுப்பினை சேமிப்பு கிடங்குகளின் ஒப்படைக்கின்றனர்.  சேமிப்புக் கிடங்கானது அதற்குத் தேவையான வசதிகளை செய்து தருகிறது.
 
              - இரயில் இருக்கும் சரக்குகளைக் கையாளுதல், சேமிப்புக்  கிடங்கிற்கு எடுத்து வருவது, சரக்குகளை இறக்குவது, எடை எடுப்பது மற்றும்  கிடங்குகளில் சரியாக அடுக்குவது, மறுபடி மூட்டையாக கட்டுவது, சேதமாகாமல்  பாதுகாப்பது, தேவையெனில் தரப்படுத்துவது மற்றும்   அடுக்கியதை எடுத்து ஒப்படைப்பதற்கு சரக்குகளை ஏற்றுவது போன்ற வேலைகளை  உள்ளடக்கியது சேமிப்புக் கிடங்காகும்.
 
              - கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டணங்களை கழகமானது பொருள்  சேமித்து வைப்பவர்களிடம் இருந்து பெறுகிறது.
 
              - கையாளுதல் மற்றும் போக்குவரவு போன்ற செயல்களை  செய்யும் தொழிலாளர்களுக்கு ஆகும் தொகை, கழகத்தால் வாங்கப்படும் சணல் பைகள், சணல்  நூல் போன்றவற்றின் தொகையை பொருள் வைப்பவர்கள் கொடுத்தல்வேண்டும்.
 
              - மேற்பார்வை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆகும்  கட்டணம் மற்றும் சில நிகழ்வுகளால் ஏற்படும் செலவுக்கான தொகையை பொருள்  வைப்பவர்களிடம் 15 சதவிகிதம விதத்தில் வாங்குதல் (பொருள் வைப்பவர்கள் மற்றும்  கழகம் போன்றவர்களின் இடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் பேரில் ஏற்படுத்தப்படுகிறது).
 
              - வாடகை கொடுக்கப்படுவதன் அடிப்படை மற்றும் இரயில்  இரசீது போன்றவற்றினை முன்கூட்டியே சேமிப்புக் கிடங்கின் அலுவலர்களிடம்  ஒப்படைப்பதன் மூலம் அனைத்து சரக்குகளும் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.  சரக்குகளை அனுப்பவதற்கு வாடகை உடன் ஒரு எழுதப்பட்ட ஒப்பந்தமும் இருத்தல்  அவசியமானது. இரசீதினை கொடுப்பதில் கால தாமதம் ஏற்படுமெனில் இரயில் பெட்டியில்  இருந்து பொருட்களை கால தாமதமாக எடுப்பதற்கான கூடுதல் தொகையை பொருள் வைப்பவர்  கொடுத்தல் வேண்டும்.
 
              - ஆயினும் கூட, எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் கடன்  தொகையை, சேமிப்புக் கிடங்கு அலுவலகர் பொருட்பாளரை அணுகி வாடகைக் கட்டணம் /  குறைந்த கட்டணம் / நஷ்டஈடு / பொருள் இறக்குவதற்கான கூடுதல் தொகை / பிற கடன்  தொகையை அதிகாரிகள் பெறுகின்றனர். சேமிப்புக் கிடங்கு கொடுத்த இந்தத் தொகையை  நிர்வாக மேற்பார்வைக் கணக்கில்  ஈடு செய்து  பொருள் வைப்பவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றது.
 
              - தவறாமல் அடிக்கடி பொருட்களை சேமித்து வைப்பவர்களிடம்  கழகமானது ஆலோசித்து தனிப்பட்ட புறத் தொழிலாளர்களை குத்தகையின் அடிப்படையில்  போக்குவரவு மற்றும் கையாளுதலுக்காக நியமிக்கப்படுகிறது. இதற்கான தொகை மற்றும்  வழிமுறைகளும், நிபந்தனைகளும் கழகமானது நிர்ணயிக்கிறது. பொருள் சேமித்து வைப்பவர்  இதற்காக ஆகும் தொகையை மேற்பார்வைக்கான கட்டணத்துடன் கொடுத்தல் வேண்டும்.
 
              - மத்திய சேமிப்புக் கழகமானது குறைந்த பட்ச செயல்பணிச்  செயல்களை பொருள் வைப்பவர்கள் கொடுக்கும் கட்டணத்தின் அடிப்படையில் செய்து  வருகின்றது. செயல்பணிச் செயல்களின் இயல்பு மற்றும் அதன் நீடிப்பு போன்றவையானது  சேமிப்புக் கிடங்கிற்கு பொறுப்பாளராக இருக்கும் அலுவலர்களை பொறுத்தும், பொருள்  வைப்பவர்களால் எந்த விதத் தகராறும்   இல்லாமல் இருக்கின்றது.
 
              - மத்திய சேமிப்பு கழகமானது கட்டணப்பட்டியலை உயர்த்தி,  எவ்வித காலதாமதமும் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணம்  செலுத்த சேமிப்புக் கிடங்கு நியமித்துள்ளது.  ஆனால் சிலப் பொருள் வைப்பவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த போதிலும்  அவர்களுக்கு என தனிப்பட்ட அனுசரிப்பும் கிடையாது.
 
              - குறைபாடு இருக்கும் பட்சத்தில், இரயில்வேயிடம்  இருந்து சான்றளிப்பினை சேமிப்புக் கிடங்கு பொறுப்பாளர் பெற்று, பொருள்  வைப்பவருக்கு அனுப்புகின்றனர். தேவையெனில் இரயில்வேயிடம் இருந்து பெறலாம். ஆனால்  சேமிப்புக் கிடங்கிற்கு கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இரயில் துறைக்கு இல்லை.  தேவையின் அடிப்படையில் மற்றும் கவனத்தின் நீடிப்பு அடிப்படையில் பொருள்  வைப்பவர்களிடம் கழகமானது கூட்டுறவு வைத்துக் கொள்கிறது.
 
              - பொருட்களை இறக்குமதி செய்யும் போது இரயில்வேயில்  கட்டணம் சேர்த்துக் கட்டும் நிலை ஏற்படும் போது பொருள் வைப்பவர்களுக்கு  இக்கட்டான சூழ்நிலையாக அமைகிறது. ஆனால் பொருள் வைப்பவரிடம் சரியான இரசீது  இருக்கும் போது இரயில்வே கழகத்திடம் அனுப்பவேண்டாம் என்று  பொருள் வைப்பவர் கூறலாம். அதன் காரணமாக  பொருள் சேமித்து வைப்பவர் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை அனுப்பிப் பெறுகின்றனர்.
 
              - சணல் பைகள் வாங்கியதற்கான தொகையின் ரொக்க சீட்டு  மற்றும் மேற்பார்வையிடுவதற்கான கட்டணம் போன்றவற்றின் அடிப்படையில் பொருள்  வைப்பவர் சேமிப்பு கழகத்திடம் செலுத்துதல் வேண்டும்.
 
              - பொருட்களை எடை போடுதல் மற்றும் பரிசோதனை செய்வது  போன்றவை வரவு சீட்டு அடிப்படையில் செய்யப்படுகிறது. எடை எடுப்பது, வைப்பவர்களின்  அறிவுரைப்படி எடுக்கப்படுகிறது. தரமுடைய பைகளில் சேகரித்து, வர்த்தகக் குறி  எடையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மத்திய சேமிப்புக் கழகமானது  பொருட்களை பெற்றுக் கொள்ளும் போது இந்த வர்த்தகக் குறி எடை அடிப்படையில்  பெறுகிறது மற்றும் பொருட்களை வாங்கும் போது ஏதேனும் இழப்பு / குறை இருப்பின்,  கழகமானது பொறுப்பேற்காது. அனைத்து சேதம், தளர்வான மற்றும் தளர்வற்ற பைகள் /  தொகுப்புகள் போன்றவற்றிற்கு பொருள் வைப்பவரின் செலவில் எடை போடப்படுகிறது.
 
              - கழகத்தில் லாரியை நிறுத்தி எடை போடும் மேடை மூலம்  பொருட்களை எடை எடுக்கும் போது, எடை போடுவதற்கான கட்டணமானது லாரி வகையின்  அடிப்படையில் பொருள் வைப்பவர் சேமிப்பு கிடங்கிடம் கொடுத்தல் வேண்டும்.
 
              - நியமிக்கப்பட்ட புறத் தொழிலாளர்கள் செயலிழப்பு  அல்லது கையாளுதல் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கால தாமதம் ஏற்படும் போது  சேமிப்புக் கிடங்கு மாற்று புறத்தொழிலாளர்களை (அல்லது) தினசரி வேலையாட்களை  நிர்ணயித்து துரிதப்படுத்தி பொருளாதார அளவில் செயல்படுகிறது. இதற்கான முன்  அறிவிப்பினை பொருள் வைப்பவர்களிடம் கொடுக்காமல் இருந்தால் கூட எதிர்ப்பும்  தெரிவிப்பது இல்லை.
 
             
           
          பொருட்களின்  பகிர்மானம் மற்றும் விற்பனை 
             
          பொருட்களின் பகிர்மானம் மற்றும்  விற்பனைக்கும் பொருள் வைப்பவர்களின் விருப்பப்படி கழகமானது பொறுப்பெடுத்துக்  கொள்கிறது. இதற்கென சட்டத்தின் அடிப்படையில் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும்  உருவாக்கி அதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இதற்கான தரகு கட்டணமானது,  சேமிப்புக்கிடங்கு கட்டணம், கையாளுதல் கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணம்  மற்றும் மேற்பார்வையிடுவதற்கான கட்டணம் போன்றவற்றுடன் செலுத்தப்படவேண்டும். 
          பொருட்களின்  விநியோகம் 
          
            
              - சேமிப்பிற்கு வைக்கப்பட்ட பொருட்களானது பொருள்  வைத்தவர், அல்லது இவரால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரி அல்லது வெளியே எடுப்பதற்கான  உத்தரவைக் கொண்டு வரும் நபர் போன்றோரிடம் சேமிப்புக் கிடங்கானது கொடுத்தல்  வேண்டும். பொருள் வைத்தவர்களிடம் விநியோகிப்பது மட்டும் அல்லாமல், சேமிப்புக்  கிடங்கு இரசீதினையும், சேமித்து வைத்ததற்கான மாதிரி கையெழுத்தினையும் உடைய  சான்றளிப்பின் நகலையும் சேமிப்பு கிடங்கானது பெற்றுக்  கொள்கிறது.
 
              - பொருள் சேமித்து வைப்பவர்கள் அதிக ஈடுபாட்டுடன்  தரமான  வர்த்தகப்  பொருட்களை அனுப்புகின்றனர். தகுதியற்ற  பொருட்களை சேமித்து வைப்பதனை நிராகரிக்க சேமிப்புக் கிடங்கின் அதிகாரிக்கு உரிமை  உண்டு. மேலும் இந்த அதிகாரிக்கு சேமிக்க அனுப்பும் பொருட்களில் பைகளைப் பிரித்து,  சேதமடைந்த பொருட்களாக / சேதமற்ற பொருட்களா என்று பார்ப்பதற்கு உரிமை உண்டு. இவ்வாறுப்  பிரித்து பார்த்து மறுபடியும் பைகளில் தைப்பதற்கான செலவானது பொருள்  பாதுகாப்பதற்கு ஆகும் கட்டணத்துடன் பொருள் சேமித்து வைப்பவர் செலுத்துதல்  வேண்டும்.
 
              - உணவுப் பொருட்களை சேமிக்க அனுப்பும் போது எந்த  விதக் கிருமிகள் / தொற்றுக்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். அப்படி இருக்கும்  பட்சத்தில் சேமிப்புக் கிடங்கு அதிகாரிகள் உணவுப் பொருட்களை வேதிப் பொருட்கள் /  நச்சு வாயு மூலம் தொற்றுக்களை அழித்து, அதன் பின் சேமிதது வைக்கின்றனர். இந்த  நேர்த்திக்கு ஆகும் செலவினைப் பொருள் வைப்பவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர்.
 
              - பொருள் சேமித்து வைப்பவர்கள், சேமிப்புக் கிடங்கு  அதிகாரிகளிடம் நல்லுறவை மேம்படுத்தி, பொருட்களின் நிலையைப் பற்றி தெரிந்து  கொள்கின்றனர். மேலும் அதிக நாட்கள் சேமித்து வைக்கப்படும் பொருட்களில் அழிந்து /  கெட்டுப் போகும் நிலை ஏற்படும் போது சேமிப்புக் கிடங்கு அதிகாரிகளின்  அறிவுரைப்படி சேமிப்பு வைப்பவர்கள் விநியோகம் செய்கின்றனர். இந்த கெட்டுப்  போகும் நிலைக்கு சேமிப்புக் கிடங்கு எவ்வித பொருப்பும் ஏற்றுக் கொள்ளாது.
 
              - பொருள் சேமித்து வைத்தவர், பொருட்களை  விநியோகிக்கும் போது இருக்கும் கிழிந்த அல்லது வெற்றுப் பைகள் மற்றும்  சேமிப்புக் கிடங்கின் செயல்பணிச் செயலின் போது சேமித்து வைக்க முடியாத தேவையற்றப்  பொருட்கள் போன்றவற்றினை பெற்றுக் கொள்ளலாம். சேமிப்புக் கிடங்கிற்கு  வெளிப்புறத்தில் சேமிக்கப்படும் எந்த விதத் தேவையற்ற பொருட்களுக்கும் கழகமானது  பொருப்பு ஏற்றுக் கொள்ளாது.
 
              - பொருள் சேமித்து வைப்பவர்களுக்கு சேமித்து  வைக்கப்படும் பொருட்களுக்கு புள்ளி விபரக் கணக்கீடு தேவையெனில், கழகத்திடம்  கோரிக்கையை விடுக்கின்றனர். இதனால் கழகமானது எப்பொழுது இரசீது பெற்ற  நாளிலிருந்து மாதக் கணக்கீட்டினை வழங்குகிறது. ஆனால் பொதுவாக கழகமானது தினசரி /  வார / இரண்டு வார கணக்கீட்டினை வழங்காது.
 
              - உள்ளூர் அரசாங்கம் ஏற்படுத்திய செயல் முறைகளின் படி  பொருள் வைப்பவர்கள் விலைப்ட்டியலேட்டில் தபால் நழலையை இணைப்பதன் மூலம் சேமிப்புக்  கிடங்கு அதிகாரி விலைப்பட்டியலேட்டில் கையெழுத்து இட்டுப் பொருட்களை  வழங்குகின்றனர்.
 
              - சேமிப்பு இரசீதின் பின்புறத்தில் வரையறுத்துக்  கூறப்பட்டுள்ள வழிமுறைகளும் நிபந்தனைகளும் கொண்டு விண்ணப்பிக்க ஒப்பந்த வைப்பு  பணமானது கொடுக்கப்படுகிறது.
 
              - எவ்வித அறிவிப்பும் இன்றி வழிமுறைகள், நிபந்தனைகள்  போன்றவற்றின் பொருளானது மாற்றப்படும்.
 
              - கழகத்தின் விருப்பப்படி சட்டத்தின் பொருளை மாற்றி  அமைக்கலாம்.
 
             
           
          சேமிப்புக்  கழகத்தின் சேமிப்புக் கட்டண வீதம் 
          
            
              
                                  வ. 
                  எண்  | 
                வர்த்தக பொருள்  | 
                நிகர எடை    (கிலோகிராம்)  | 
                விலை / பை/ மாதம்    (ரூபாய்)  | 
                   | 
                பைக்கு நிகரான    மதிப்பு  | 
               
              
                1.  | 
                உணவுத் தானியங்கள்    (கோதுமை, சோளம், மக்காச்சோளம்)  | 
                100  | 
                4.10  | 
                காப்பீடு    கட்டணத்தையும் உள்ளடக்கியது.  | 
                1.00  | 
               
              
                   | 
                உணவுத் தானியங்கள்    (கோதுமை, சோளம், மக்காச்சோளம்)  | 
                50  | 
                2.45  | 
                காப்பீடு    கட்டணத்தையும் உள்ளடக்கியது.  | 
                0.56  | 
               
              
                2.  | 
                நெல்  | 
                100  | 
                4.50  | 
                காப்பீடு    கட்டணத்தையும் உள்ளடக்கியது.  | 
                1.00  | 
               
              
                   | 
                   | 
                75  | 
                3.70  | 
                காப்பீடு    கட்டணத்தையும் உள்ளடக்கியது.  | 
                0.81  | 
               
              
                   | 
                   | 
                50  | 
                3.20  | 
                காப்பீடு    கட்டணத்தையும் உள்ளடக்கியது.  | 
                0.67  | 
               
              
                3.  | 
                பயறுவகைகள்  | 
                100  | 
                3.80  | 
                ரூ. 100 க்கு 5    பைசா காப்பீடு கட்டணம் / மாதம்  | 
                1.00  | 
               
              
                4.  | 
                வாசனைத் திரவியம்  | 
                75  | 
                3.80+  | 
                ரூ. 100 க்கு 5    பைசா காப்பீடு கட்டணம் / மாதம்  | 
                1.06  | 
               
              
                5.  | 
                புளி விதை  | 
                100  | 
                3.45+  | 
                ரூ. 100 க்கு 5    பைசா காப்பீடு கட்டணம் / மாதம்  | 
                1.00  | 
               
              
                6.  | 
                சர்க்கரை  | 
                100  | 
                3.80+  | 
                ரூ. 100 க்கு 5    பைசா காப்பீடு கட்டணம் / மாதம்  | 
                1.00  | 
               
              
                   | 
                   | 
                50  | 
                1.80+  | 
                ரூ. 100 க்கு 5    பைசா காப்பீடு கட்டணம் / மாதம்  | 
                0.50  | 
               
              
                7.  | 
                உரம்  | 
                50  | 
                ரூபாய் 25 /    மில்லியன் டன்  | 
                ரூ. 100 க்கு 5    பைசா காப்பீடு கட்டணம் / மாதம்  | 
                0.50  | 
               
              
                8.  | 
                பருத்தி கட்டு  | 
                200  | 
                14.80+  | 
                ரூ. 100 க்கு 5    பைசா காப்பீடு கட்டணம் / மாதம்  | 
                3.33  | 
               
              
                   | 
                மேலே  | 
                200  | 
                21.30+  | 
                ரூ. 100 க்கு 5    பைசா காப்பீடு கட்டணம் / மாதம்  | 
                5.00  | 
               
              
                9.  | 
                சிமெண்ட்  | 
                50 124  | 
                2.60+  | 
                ரூ. 100 க்கு 5    பைசா காப்பீடு கட்டணம் / மாதம்  | 
                0.75  | 
               
              
                   | 
                   | 
                204  | 
                1.60  | 
                ரூ. 100 க்கு 5 பைசா    காப்பீடு கட்டணம் / மாதம்  | 
                1.45  | 
               
               
           
          நிலப்பரப்பின்  அடிப்படையில் 
            மொத்தம்     :      ரூபாய்  75    / மீட்டர் 2 / மாதம் 
            நிகர மதிப்பு  :      ரூபாய்  103 / மீட்டர் 2 / மாதம் 
            குடிமகனுக்கான  வசதிகள் 
           
            சேமிப்புக்  கிடங்குகளின் பட்டியல்
  |